திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (16:18 IST)

ஸ்வீட் வாங்கினால் பெட்ரோல் இலவசம்: வித்தியாசமான ஆஃபர்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ஆஃபர் தமிழகத்தில் புதியது அல்ல. வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வியாபாரிகள் செய்யும் தந்திரம் இது என்று பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை



 
 
இந்த நிலையில் திருச்சியில் உள்ள துறையூரில் 1000 ரூபாய்க்கு மேல் ஸ்வீட் வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் இலவசமாக வழங்கப்படும் என்று முன்னணி ஸ்வீட் ஸ்டால் ஒன்று அறிவிப்பு செய்துள்ளது.
 
இந்த கடையில் ரூ.1000க்கு மேல் ஸ்வீட் வாங்கினால் ஒரு டோக்கன் தரப்படும். அந்த டோக்கனை பயன்படுத்தி அதே ஓனர் வைத்துள்ள மூன்று பெட்ரோல் பங்குகளில் ஏதாவது ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கி கொள்ளலாம். இந்த ஆஃபர் காரணமாக அந்த கடையில் ஸ்வீட் வாங்க கூட்டம் அலைமோதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.