1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:21 IST)

சொந்த குடும்பத்து பெண்களையே ஆபாசமாக படமெடுத்த முதுகலை பட்டதாரி!

பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஒருவர் தனது சொந்த குடும்பத்தின் பெண்களையே ஆபாச படம் எடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 
 
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஒருவர் தனது சொந்த குடும்பத்தின் பெண்களையே ஆபாசமாக புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நபரின் ஆபாச பதிவுகளை பார்த்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் விசாரணையில் இந்த நபரின் பெயர் முகமது என்று தெரியவந்துள்ளது
 
இதுகுறித்து போலீசார் விசாரணையின்போது முகமது கூறியதாவது: பெண்கள் உடல் மீதான மோகத்தால் தான் அடிக்கடி ஆபாச படங்கள் பார்க்கும் வழக்கத்தை கொண்டதாகவும், அதேபோல் அடிக்கடி பெண்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றை ஆபாசமாக மாற்றியதாகவும், குறிப்பாக பேருந்துகளில் ரயில்களில் பெண்கள் செல்லும் போது அவர்களுடைய புகைப்படத்தை அவர்களுக்க்கு தெரியாமல் எடுத்து அதை ஆபாசமாக மாற்றி புதுப்புது சமூக வலைதள கணக்கு தொடங்கி அதில் பதிவு செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் 
 
மேலும் ஒரு கட்டத்தில் தன்னால் பெண்களின் மீதான கவர்ச்சி அதிகமாகவே, குடும்பத்திலுள்ள பெண்களையே ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும் அவர் போலீசாரின் தெரிவித்திருப்பது போலிசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது