வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (09:15 IST)

வெளிநாட்டு வேலை: சொகுசான வாழ்க்கை; ஏமாற்றிய நபர்: நடுரோட்டில் வெட்டிய வாலிபர்கள்

மயிலாடுதுறையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய நபர் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த அசோக் என்ற நபர் கும்பகோணத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இவரிடம் பணத்தை திரும்பக் கேட்டும் அவர் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முன் தினம் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த இவனை மர்மகும்பல் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவனை கடத்தி சென்ற நபர்கள் அசோக்கை கொலை செய்து ரோட்டில் வீசி சென்றனர். இது சம்மந்தமாக போலீஸார் ஒரு நபரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.