வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (18:03 IST)

மின்னல் தாக்கியதில் கண் பார்வையை இழந்த சிறுமி! - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

விழுப்புரத்தில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் பள்ளி சிறுமி கண்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக இடியுடன் கூடிய கனமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. அப்போது சுக்கனூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டுக்கு அருகே உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. அதன் விளைவாக அவரது வீட்டில் இருந்து மின்சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளன. அந்த ஒளி தாக்கியதில் அசோக்குமாரின் மகள் சன்மதி கண்பார்வையை இழந்ததாக கூறப்படுகிறது.

 

மின்சாதன பொருட்கள் வெடித்தபோது ஏற்பட்ட ஒளியால் சன்மதி பார்வை மங்க தொடங்கியதாகவும் தொடர்ந்து பார்வை முழுவதுமாக பறிபோனதாகவும் கூறப்படும் நிலையில் அவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கண் பார்வை திரும்ப பெற செய்ய மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K