செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (10:11 IST)

சென்னையின் முக்கிய சாலையில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்: பெரும் பரபரப்பு

சென்னை ராயப்பேட்டை சாலையில் இன்று அதிகாலை திடீரென ஒரு இளம் பெண் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று அதிகாலை 3 மணி அளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக நடந்து சென்றதை பார்த்த அந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தவுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த பெண் காவலர்கள் அந்த பெண்ணுக்கு உடை கொடுத்து அவரிடம் விசாரணை செய்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு தமிழ் தெரியவில்லை என்பதும் தெலுங்கில் மட்டுமே பேசியதாகவும் தெரிகிறது. 
 
மேலும் அந்தப் பெண்ணுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சை முடிந்தவுடன் அவரிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி வருவதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து அந்த பெண் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
 
சென்னையின் முக்கிய சாலையில் 20 வயது இளம்பெண் ஒருவர் திடீரென நிர்வாணமாக நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது