வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (10:00 IST)

மாநிலத்திலேயே இரண்டாம் இடம் பிடித்த பெண் - மருத்துவரை கொலை செய்த அவலம்

சென்னையில் ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டிய மருத்துவரை பெண் ஒருவர் கூலிப்படையை வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார்(36). இவர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது.
 
திருச்சி உறையூரை சேர்ந்த ஈஸ்வரி (21) என்ற பெண் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து சி.ஏ. படித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் விஜயகுமாருக்கும் ஈஸ்வரிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை விஜயகுமார் வீடியோவாக எடுத்து வைத்து ஈஸ்வரியை மிரட்டி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். விஜயகுமாரின் தொல்லை அதிகரிக்கவே, ஈஸ்வரி விஜயகுமாரை கொல்ல திட்டமிட்டார்.
 
இதனையடுத்து ஈஸ்வரி கூலிப்படையை ஏவி, விஜயகுமாரை கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தொடர்ந்து விசாரணை செய்ததில் விஜயகுமார் அடிக்கடி ஈஸ்வரியிடம் பேசியுள்ளதை போலீஸார் கண்டுபிடித்தனர். பின் ஈஸ்வரியை பிடித்து விசாரித்ததில் 55,000 கொடுத்து கூலிப்படையை ஏவி விஜயகுமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸார் ஈஸ்வரியையும், கொலை செய்த கூலிப்படையினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்த விஷயத்தில் கொடுமை என்னவென்றால் ஈஸ்வரி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது மாணவியாக தேர்வாகியுள்ளார்.