ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:39 IST)

நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை! – மதுரையில் பரபரப்பு!

மதுரையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை மாவட்டம்,  திருப்பரங்குன்றம் தாலுக்கா ஆஸ்டியன்பட்டி அருகிலுள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட் பக்கத்தில் ஆண் சடலம்  ஒன்று நேற்று கிடந்தது.

இது பற்றி தகவல் அறிந்த ஆஸ்டியன்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  கொலை செய்யப் பட்ட  அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின்  விசாரணையில், அவர்   நெல்லை மாவட்டம்,  பாளையசெட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்  பால்ராஜ் என்பவரின்  மகன்  கிருஷ்ணகுமார் ( 30) என, தெரிந்தது.

ஏற்கனவே ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட சில வழக்கு நிலுவையில் இருப்பதும், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு  கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.