1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (16:57 IST)

வேறொரு காதலுக்கு எதிர்ப்பு கூறிய கள்ளக் காதலன்...கூலிப்படையை ஏவி கொன்ற காதலி

Death
பொன்னேரியில் வேறொருவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கள்ளக்காதலன் தட்டிக் கேட்டதால்  கோபமடைந்த இளம்பெண் கூலிப் படையினரை ஏவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் தெருவில் வசிப்பவர் நாகராஜ். இவர் கட்டிட மேஸ்த்ரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா(25).

பொன்னேரியில் உள்ள பாலாஜி நகரில் வசிப்பவர் வசிப்பர்  சசகுமாரின் மகன் கோபாலகிருஷ்ணன்(24). தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கும் பிரியாவுக்கும் நட்பு ஏற்பட்ட நிலையில், கடந்த  2 ஆண்டுகளாக கோபாலகிருஷ்ணனும், பிரியாவும் தகாத தொடர்பில் இருந்துள்ளனர்.

சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வெளியூர் சென்ற நிலையில்,  வேறொரு நபர் பிரியாவுடன் பழகியுள்ளார்.

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனுக்கு தெரிந்து, பிரியாவை செல்போனில் தொடர்புகொண்டு அந்தக் கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியா, 4 பேர் கொண்ட கூலிப்படையை அனுப்பி கோபாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி5 பேரும்  தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.