செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (14:59 IST)

காது அருகே மேளம் அடித்தவரை புரூஸ் லீ மாதிரி எட்டி உதைத்த மாடு! வைரல் வீடியோ

Bull
வீட்டில்  ஆடு, மாடு, நாய்கள், பறவைகள்  போன்றவை மனிதர்களின் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தச் செல்லப்பிராணிகள் செய்யும் சேட்டைகள், விளையாட்டுகள் பற்றி அவ்வப்போது, ரீல்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகும்.

அந்த வகையில், இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பகுதியில், காளை மாட்டிற்கு மாலை உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டது.

அப்போது ஒரு பகுதியில், நின்று கொண்டிருந்த மாட்டின் காது அருகே வந்து ஒரு நபர் மேளம் அடித்தார்.

இதில், கடுப்பான மாடு, அந்த மேளம் அடித்த நபரை காலால் எட்டி உதைத்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.