1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (19:59 IST)

மார்வாடிகளின் கடைகளை பூட்டுவோம்: போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு

மார்வாடிகளின் கடைகளை பூட்டுவோம்
தமிழகத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் செய்து தமிழர்களின் தொழிலை நசுக்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டில் இருந்து வரும் நிலையில் மதுரையில் மார்வாடிகளின் கடைகளை பூட்டுவோம் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மார்வாடிகள் தொழில் தொடங்கி அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வட மாநிலத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஹோலி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் திடீரென மதுரை மாட்டுத்தாவணி அருகே சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வெளிமாநில மார்வாடிகளின் வணிக நிறுவனங்களை பூட்டுவோம் என்றும் தமிழகத்திலிருந்தும் மார்வாடிகளைவிரட்டுவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 
தமிழ் தேசிய கட்சியினர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளதாக தெரிகிறது. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள இரண்டு மார்வாடிகளின் கடைகளையும் தமிழ் தேசியக் கட்சியினர் பூட்டியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து மார்வாடிகளின் அச்சத்தை போக்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் மற்றும் இரண்டு கடைகளுக்கு பூட்டு ஆகிய சம்பவங்கள் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது