சென்னை கார் பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கு.! போக்குவரத்து ஆணையருக்கு பறந்த உத்தரவு..!!
சென்னையில் கார் பந்தயம் நடத்த உரிய விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டதா என போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தவுள்ளது. கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அசவுகர்யம் இருக்க கூடாது என்றும் தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் நீதிபதிகளை குறிப்பிட்டனர்.
மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்க கூடாது என்றும் போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்