1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (08:19 IST)

50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழகத்தில் பெரும் பரபரப்பு

சர்கார் பட விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்கார்' படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் மறுதணிக்கை செய்த படம் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக தஞ்சையில் 25 விஜய் ரசிகர்கள் மீதும், நாகையில் 20 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் 10 விஜய் ரசிகர்கள்  மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.