சர்காருக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்: திரையுலகினர் ஒன்று சேர்வார்களா?

vishal
Last Modified வெள்ளி, 9 நவம்பர் 2018 (07:59 IST)
விஜய் நடித்த 'சர்கார்' படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டை நேற்று போலீசார் சூழ்ந்த நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இதனையறிந்தவுடன் இயக்குனர் விக்ரமன், நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் முருகதாஸ் வீட்டிற்கு
சென்றனர். ஆனால் அப்போது முருகதாஸ் உள்பட அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் கமல், ரஜினியை அடுத்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


sarkar
சென்சார் செய்யப்பட்டு அனுமதியுடன் வெளிவந்த ஒரு படத்திற்கு ஏன் பிரச்சனைகள் எழுப்பப்படுகின்றன என்பது தெரியவில்லை. பொதுமக்கள் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த படத்தால் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றது ஏன்? என்று விஷால் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல், ரஜினி, விஷால் குரல் கொடுத்துள்ளதை அடுத்து 'சர்கார்' படத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரையுலகினர்களும் ஒன்றுசேரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :