1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (09:20 IST)

சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது வழக்குப்பதிவு

சிறுமுகை காரப்பன் சிக்ஸ் உரிமையாளர் காரப்பன் என்பவர் சமீபத்தில் ஒரு பொது மேடையில் பேசிய போது கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். காரப்பன் கூறிய இந்த கருத்துக்கு பாஜக பிரமுகர் எச்.ராஜா சமூகவலைதளத்தில் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்துக்கள் யாரும் அவரது கடையில் துணிகள் வாங்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காரப்பன் சில்க்ஸ் கடைக்கு ஆதரவு கொடுப்போம் என டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காரப்பன் அவர்கள் இந்து மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனையடுத்து காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் மீது 2 பிரிவுகளில் கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மத உணர்வை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன