Daily Horoscope
✕

நிலவேம்பு கசாயம் கொடுத்த விஜயகாந்த் மச்சான் மீது வழக்குப்பதிவு

Written By sivalingam
Updated: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:24 IST)
கடந்த சில நாட்களாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் ஆளும் கட்சியினர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படும் நிலையில் தேமுதிக துணை பொதுச்செயலாளரும், விஜயகாந்த் மனைவியின் சகோதரருமான சுதீஷ் மீது தமிழக அரசு திடீரென வழக்குப்பதிவு செய்துள்ளது.



 
 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி தினந்தோறும் உயிர்கள் பலியாகி வருவதை அடுத்து அரசும், தனியார் சமூக அமைப்புகளும், நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பொதுமக்களுக்கு அனுமதியின்றி நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ததாக சுதீஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் கோவை காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவொரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இந்த வழக்கை சட்டப்படி தேமுதிக சந்திக்கும் என்றும் தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.,
 

எல்லாம் காட்டு

இந்த வருடமாவது நோபல் பரிசு கொடுங்கள்.. அடங்காத அமெரிக்க அதிபர் டிரம்ப்..

2031 சட்டசபை தேர்தல்தான் டார்கெட்!.. தனுஷோட பிளானே இதுதான்!..

ஆர்பிஐ வட்டி உயர்வால் 2-வது நாளாக பங்குச்சந்தை கரடியின் பிடியில்.. ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

கடும் எதிர்ப்பு எதிரொலி: யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் கொண்டு வரும் முடிவு ஒத்திவைப்பு?

வெற்றிப் பயண திட்டம் எதிரொலி!.. அரசு பேருந்தில் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments