1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 அக்டோபர் 2021 (20:57 IST)

பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்: ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம்: ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!
சிதம்பரத்தில் பள்ளி மாணவரை தாக்கிய விவகாரம் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து தாக்கிய ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் நந்தனார் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கினார் 
 
ஆசிரியர் சுப்பிரமணியன் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவரை தாக்கிய விவகாரம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை அந்த வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரே எடுத்து வைரலாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.