1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (12:19 IST)

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் கெமிக்கல்!?? – அதிர்ச்சி தகவல்!

Cotton Candy
குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி உண்ணும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமுள்ள வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுவதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருவிழாக்களிலும், பொது இடங்களிலும் விரும்பி வாங்கும் உணவு வகைகளில் பஞ்சு மிட்டாயும் ஒன்று. நல்ல ரோஸ் கலரில் உள்ள பஞ்சு மிட்டாய் குழந்தைகள் பலரையும் கவர்கிறது. ஆனால் இந்த பஞ்சு மிட்டாய்களை தயாரிக்க உடலுக்கு பாதிப்பு இல்லாத வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுகிறதா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக பஞ்சு மிட்டாய் தயாரிக்க உடலுக்கு தீங்கற்ற பொருட்களே சேர்க்கப்பட்டு வருகிறது. இதற்காக உணவு பாதுகாப்பு துறையும் உரிய ஆய்வுகளை செய்து அனுமதி அளிக்கிறது. ஆனால் ஒரு சில கடைகளில் பஞ்சு மிட்டாயின் நிறம், சுவையை கூட்ட புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள வேதியியல் பொருட்கள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவ்வாறாக சில கடைகள் மீது புகார் எழுந்துள்ள நிலையில் அந்த கடைகளில் அபாயமான ரசாயனம் கலக்கப்பட்டதா என்பது குறித்து சோதனை நடைபெறும் என்றும், புகார் உறுதியானால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K