வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (11:26 IST)

நான் பாஜக-வில் இணைந்தது எனக்கே தெரியாது: முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமி

15 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததாக நேற்று செய்தி வெளியான  நிலையில் அதில் ஒருவரான முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி நான் பாஜகவில் இணைந்ததாக வெளிவந்த செய்தியை நானே ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவின் முன்னாள் 15 எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்து விட்டதாக நேற்று செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த 15 பெயர்களில் ஒருவரான முன்னாள் அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி ’நான் என்றென்றும் அதிமுக காரன் தான் நான் பாஜகவில் இணைந்ததாக வெளியான புகைப்படம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது
 
என்னை பாஜகவில் சேர அழைப்பு விடுத்தது உண்மைதான், ஆனால் நான் பாஜகவில் சேர விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார். கட்சியில் சேராத ஒருவரை சேர்ந்து விட்டதாக செய்தி வெளியாகிய நிலையில் அவர் நான் பாஜகவில் சேர்ந்து விட்டதாக வாட்ஸப்பில் வந்த செய்தியை பார்த்து தான் எனக்கே தெரிய வந்தது
 
 என்னை உயர்த்திவிட்ட கட்சிக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன், கட்சி மேலிடத்திற்கு ஏற்கனவே இதுகுறித்து விளக்கம் அளித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran