1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (13:02 IST)

சேலம் கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்பு

சேலத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் தெரு முழுவதும் ஆறு போல தண்ணீர் ஓடியது. 
 
இந்நிலையில், சேலம் நாராயணநகர் பகுதியில் 4 மாணவர்கள் சினிமா பார்த்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையை கடந்த போது முகமது ஆசாத் என்ற மாணவன் தவறி ஓடையில் விழுந்துள்ளான். பயங்கர வெள்ளப்பெருக்கால் மாணவன் அடித்துச் செல்லப்பட்டான்.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணப்புத் துறையினர், மாணவனை தேடி வந்தனர். சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி மாணவனின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் மாணவனை மீட்க ஏராளமான தீயணைப்புத் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
 
இந்நிலையில் 30 மணி நேர தேடுதலுக்குப் பின், இன்று மாணவனின் சடலம் கருவாட்டுப் பாலத்தில் கண்டெடுக்கப்பட்டது. மாணவனின் உடலைப் பார்த்து அவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதனர்.
இதுகுறித்து கேள்விபட்ட சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி, மாணவனின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த துயர சம்பவம் சேலம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.