திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (17:45 IST)

சென்னை அண்ணாசாலை அருகே திடீரென ஏற்பட்ட பள்ளம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ தியேட்டர் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் உள்ள பல இடங்களில் அவ்வப்போது திடீர் பள்ளம் ஏற்பட்டு பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே சில முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மயிலாப்பூரில் பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது.  தற்சமயம் பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran