திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthi Velan
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:06 IST)

மகளுக்கு பாலியல் தொல்லை! தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

crime
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
கோவை, தடாகத்தை  சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலித்தொழிலாளியான இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.  பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில்,  எனது மகள் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் எனவும் எனது மகளுக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த வாலிபர் மீது மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போலீசாரிடம் வேலுச்சாமி தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொழிலாளி ஒருவர்,  உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.