வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (20:39 IST)

பொதுமக்கள் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ma. subramanian
சென்னை 47 வது புத்தகக் கண்காட்சி நடந்து வரும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கொரோனா உடல் காத்தோம், உயிர் காத்தோம் ஆகிய நூல்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரொனா பாதிப்பு முந்தைய ஆட்சியாளர்கள் இருந்தபோதே வந்துவிட்டது. அப்போது மருத்துவமனையில், படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் இருந்தது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு கொரொனா குறையத்தொடங்கியது. கொரொனாவின் போது நடிகர் விவேக் மறைந்த பிறகு மக்கள் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பயந்தனர்.  மக்களிடம் அதன் முக்கியத்துவம் எடுத்துக் கூறினோம். தமிழ்நாட்டில்  பொதுமக்கள் தற்போது 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

கொரொனா எத்தகையது. அதன் பாதிப்புகள் எப்படி இருந்தன. அதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள், நடவடிக்கைகள் என்ன? என்பதை பற்றிய ஆவணம் தான் இப்புத்தகம். அதற்குத்தான் இதை எழுதினேன் என்று தெரிவித்துள்ளார்.