செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (16:38 IST)

''காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்''..தனி நீதிபதியின் கருத்தை நீக்கிய நீதிபதிகள்

காவல்துறையில் இருக்கும் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்தான் என தனி நீதிபதி வேல்முருகன் கூறிய கருத்தை உயர் நீதிமன்ற  இரு நீதிபதிகள் அமர்வு நீக்கியுள்ளனர்.

தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரி டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரனை இன்று  உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ்,  நக்கீரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் காவலர்கள் மத்தியில் தனி நீதிபதியின் எதிர்மறைக் கருத்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது என டிஜிபி தரப்பில் வாதப்பட்டது.

இதையடுத்து,தனி நீதிபதியின் கருத்து நீக்கம் செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ்  நக்கீரன் அதிரடி உத்தரவிட்டனர்.