1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 3 ஜூலை 2016 (12:12 IST)

சத்துணவில் பல்லி: 9 மாணவர்கள் மயக்கம்

திருவாலங்காடு அருகே மதிய உணவு சத்துணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட 9 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்


 

 
திருத்தனி மாவட்டம் திருவலங்காடு ஒன்றியம் சிவாடா பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் மொத்தம் 220 மானவ- மாணவிகள் பயின்று வாருகின்றனர்.
 
வெள்ளிக்கிழமை மதிய உணவு 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்கள் சத்துணவு வழங்கப்பட்டது. அதில் ஒரு மாணவர் சாப்பாடு வாங்கும் போது பல்லி கிடந்தது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.
 
முன்னதாக உணவு வாங்கி சாப்பிட்ட 9 மாணவர்கள் மயக்கம், வாந்தி ஏற்பட்டு, உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
மேலும் அப்பள்ளி சத்துணவு ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.