வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 12 அக்டோபர் 2023 (08:24 IST)

3 கலெக்டர்கள் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. முழு விபரங்கள்..!

நிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பெயரிலும் தமிழகத்தில் அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் முழு விவரங்கள் இதோ
 
1. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் 
 
2. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக நியமனம்
 
3. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்
 
4. செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராக நியமனம் 
 
5. நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமனம் 
 
6. சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக நியமனம்
 
7. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக இருந்த வீரராகவ ராவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையராக நியமனம் 
 
8. திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமனம்
 
9. வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக நியமனம்
 
 
Edited by Siva