1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. All India Majlis-e-Ittihadul Muslimeen Party functionaries meeting with EPS

அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம்: அகில இந்திய மஜ்லிஸ்-ஏ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவிப்பு..!

இஸ்லாமிய அமைப்பு
அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என அகில இந்திய மஜ்லிஸ்-ஏ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்துள்ளது 
 
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கழற்றிவிடப்பட்ட பின்னர் சிறுபான்மைக் கட்சியினர் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே தமிமுன் அன்சாரி உட்பட சில இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதிகள் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.  திமுகவின் மிகப்பெரிய பலமாக இருந்த சிறுபான்மையினர் ஓட்டு தற்போது அதிமுக பக்கம் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
திமுக சிறுபான்மையினருக்கு செய்வதாக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று கூறப்படும் நிலையில் அதன் காரணமாக தற்போது இஸ்லாமிய அமைப்பினார் அதிமுக பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ- இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியான அறிக்கையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்று 3 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!