செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (20:16 IST)

தமிழ்நாட்டில் 8 மருத்துவர்களுக்குக் கொரொனா ! அதிர்ச்சி அளிக்கும் தகவல்!

கோப்புப் படம்

தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு தற்போது வரை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 58 பேருக்கு புதிதாகக் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 8 மருத்துவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர் அரசு மருத்துவர்கள் என்றும் 4 பேர் தனியார் மருத்துவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களிடம் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளை ட்ராக் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.