செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 10 மார்ச் 2020 (16:27 IST)

ஈரானிடம் சிக்கிய 700 தமிழக மீனவர்கள்.. மீட்கக் கோரி சீமான் கோரிக்கை !

ஈரானிடம் சிக்கிய 700 தமிழக மீனவர்கள்.. மீட்கக் கோரி சீமான் கோரிக்கை !

எல்லை மீன் பிடித்து ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 700 மீனவர்களை போர்கால அடிப்படையில் மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து சீமான் கூறியுள்ளதாவது :
 
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானில் மீன்பிடி தொழிலுக்காகச் சென்று சிக்கித்தவிக்கும் 700க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் உணவின்றி அல்லலுறும் செய்திகேட்டு பெரும் துயருற்றேன். அம்மீனவர்களின் குடும்பத்தினரும் பெரும் கலக்கமடைந்து செய்தவறியாது இருக்கின்றனர்.
 
மத்திய வெளியுறவுத்துறை உடனடியாக ஈரான் நாட்டு இந்தியத் தூதரகம் வாயிலாக அம்மீனவர்களைத் தொடர்புகொண்டு உதவி போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்டுத் தாயகம் கொண்டு வர நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறேன் என  சீமான் தெரிவித்துள்ளார்.