1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 29 அக்டோபர் 2016 (10:35 IST)

செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் கைது

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 81 தமிழர்களை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 

 
ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதற்கென்று தனிப்பிரிவு காவல் படை அமைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் 69 தமிழர்கள் செம்மரம் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 81 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அவர்களிடம் இருந்து 42 செம்மரங்கள் மற்றும் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செம்மரக் கடத்தலில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருவது சந்தேகத்திற்கான இடமாய் அமைகிறது.