செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (12:02 IST)

ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்தலைமையில் 63 குண்டுகள்முழங்ககாவலர் வீர வணக்க நாள் கடை பிடிக்கப்பட்டது

ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பது வழக்கம். 
 
1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். 
 
கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்கு தெரியும் இவ்விடத்திலிருந்து இன்று நினைவு கூறுகிறோம். 
 
அதில் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த காவல் குடும்பத்தினர் 213 காவலர் நினைவாக மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
 
பின்பு 63 குண்டுகள் முழங்கப்பட்டது
இதில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள் , ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என  பலர் கலந்து கொண்டனர்.