வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (21:03 IST)

டிடிவி தினகரனின் ஐடியாவை அடித்து நொறுக்கிய தேர்தல் ஆணையம். பரபரப்பு தகவல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, வேட்பு மனு பரிசீலனையும் முடிந்துவிட்ட நிலையில் இன்றுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக இருந்தது. இன்று  8 சுயட்ச்சை எம்.எல்.ஏ உட்பட 20 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர். எனவே மொத்தம் தாக்கல் செய்திருந்த 82 பேர்களில் தற்போது 62 பேர் போட்டியிடுகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.



 


62 பேர் போட்டியிட்ட போதிலும் நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி கள்ள ஓட்டு போட ஏதுவாக இருக்கும் என்று டிடிவி தினகரன் ஐடியாவை தேர்தல் ஆணையம் அடித்து நொறுக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றது. சுயேட்சை வேட்பாளர்களில் பலர் டிடிவி தினகரனின் பினாமிகள் என்ற கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது என்பது தெரிந்ததே