1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (15:25 IST)

வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த கொம்பேறி மூக்கன் பாம்புகள்

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் நம்பிராஜன் என்பவரின் வீட்டின் கூரையில் பதுங்கியிருந்த 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் உள்ள  நம்பிராஜன் என்பரின் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்னர், தன் வீட்டின் கூரையில் பாம்பு இருப்பது குறித்து, தீயணைப்புத்துறைக்கு நம்பிராஜன் தகவல் கொடுத்தார்..

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டிற்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதைக் கண்டறிந்து, 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளைக் கண்டறிந்தனர்.
snake

இதுகுறித்து, தீயணைப்புத்துறையினர், 'வெயில் காலம் தொடங்கியுள்ளதால், பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது என்றும், இதனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று' அறிவுறுத்தினர்.