செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (23:27 IST)

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் 6 மத்திய தொழிற்சங்கங்கள்: வலுக்கும் போராட்டம்

தமிழகத்தில் கடந்த ஆறு நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அடைந்து வருகின்றனர். மேலும் பொங்கல் திருநாள் நெருங்குவதால் திட்டமிட்டபடி பொங்கல் திருநாளை கொண்டாட ஊர்போய் சேர முடியுமா? என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நீதிமன்றமும், அரசும் எச்சரிக்கை செய்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இந்த நிலையில் இந்த போராட்டம் அடுத்தகட்டத்தை சென்றடையும் வகையில் தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக 6 மத்திய தொழிற்சங்கங்கள் போராட்ட களத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது.

வரும் 11ஆம் தேதி முதல் 6 மத்திய தொழிற்சங்கங்கள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.