1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (23:09 IST)

பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக 5000 பேர் பங்கேற்ற பேரணி

karur
உலக  சிந்தனை நாள் சாரணர் பேரணி :  உலக சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல்  பிறந்த நாளான பிப்ரவரி 22ம் தேதி உலகம் முழுவதும் உள்ள சாரணர் இயக்கத்தினரால் சர்வதேச சகோதரத்துவத்தையும் உலக அமைதியையும் வலியுறுத்தும் சிந்தனை நாளாகக் கொண்டாடப்படுகிறது.       இதன் தொடர்ச்சியாக  பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் சார்பாக சிந்தனை நாள் பேரணி, பல்வேறு போட்டிகள் இன்று 22.02.2023 பரணி பார்க் சாரணர் திடலில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்விற்கு பரணி பார்க் சாரணர் மாவட்டத் தலைவர் S.மோகனரங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர் பத்மாவதி மோகனரங்கன், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் தீபம் உ.சங்கர் சாரணர் இயக்க சிந்தனை நாள் பேரணியைத் துவக்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில் உலக சாரணர் இயக்க நிறுவனர் பேடன்  பவல், லேடி பேடன் பவல் உடையணிந்த  முயல்குட்டியர்கள், குருளையர்கள், நீலப்பறவையினர்கள், மற்றும் பெருந்திரளான சாரண, சாரணீயர்கள், திரி சாரண, திரி சாரணீயர்கள், சாரண, சாரணீய ஆசிரியர்கள், துணை ஆணையர்கள் s.சுதாதேவி, K.சேகர், செயலாளர் R.பிரியா என மொத்தமாக 5000 பேர் பங்கு பெற்ற சிந்தனை நாள் பேரணி வெண்ணைமலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 
 
நிறைவாக பேடன்  பவல், லேடி பேடன் பவல் உடையணிந்த மாணவர்கள் மற்றும் சிந்தனை போட்டிகளில் வென்ற சாரணர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.