1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 20 ஜூன் 2016 (11:52 IST)

500 கடைகளை மூடியதால் என்ன பயன்? கேள்வி எழுப்பும் அன்புமணி

500 கடைகளை மூடியதால் என்ன பயன்? கேள்வி எழுப்பும் அன்புமணி

தமிழகம் முழுக்க பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில், வெறும் 500 கடைகளை மூடுவதால் என்ன பயன்கிடுத்துவிடப்போகிறது என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்தும் நோக்கத்தில் முதல்கட்டமாக 500 மதுக்கடைகள்  நேற்று மூடப்பட்டுள்ளன.
 
தமிழகத்தில், மதுக்கடைகளின் மதுவிற்பனை நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டாலும், 500 மதுக்கடைகள் மூடப்பட்டாலும், அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பது தான் உண்மை.
 
அதிகளவில் மது விற்பனையாகும் கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலுள்ள கடைகள் தான் முதலில் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போதோ மது விற்பனை குறைவாக உள்ள கடைகள் மட்டும் தான் மூடப்பட்டுள்ளன. இது மக்களை ஏமாற்ற மட்டுமே இந்த நடவடிக்கை உதவும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.