வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (22:31 IST)

துருக்கியில் மீட்பு பணிகள் சரியில்லை என்று பதிவிட்ட 4 பேர் கைது!

turkey
துருக்கி நாட்டின் தென் மத்திய பகுதியில் கடந்த 6 ஆம் தேதி சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்த நில நடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவானதாக கூறப்பட்டது.

துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 5000 பேர் பலியானதாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டொஅர் காயமடைந்திருப்பதாகவும்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இங்கு மீட்பு பணிகள்  நடந்து வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு மீட்பு படைகள் உள்ளிட்ட உதவிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில்,  துருக்கில் உள்ள ஹடே நகரில் மீட்புப் பணிகள் சரியில்லை என்று புகார் தெரிவித்து சமூக வலைதளத்தில்பதிவிட்டனர்.

அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளஙளில் பதிவிட்ட 4 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.