செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (16:32 IST)

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
 
இந்நிலையில் மன்னர் வளைகுடா, தமிழ்நாட்டின் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் திண்டுக்கல், திருப்பூர், வேலூர் மற்றும் திருப்பத்தூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.