1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:42 IST)

அப்பளம் போல் நொருங்கிய கார் - பெரம்பலூர் அருகே கோர விபத்து!

சுங்கச்சாவடி அருகே வரிசையில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலி. 

 
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரிசையில் காத்திருந்த கார் மீது சுண்ணாம்பு கல் ஏற்றி வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி மோதியதில் கார் முன்னே இருந்த லாரி மீது மோதி இரண்டு லாரிகளுக்கு இடைடே நசுங்கியது. இந்த சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.