1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (20:45 IST)

தமிழகத்திற்கு வந்தது 4.36 லட்சம் தடுப்பூசிகள்: முதல்வர் பயணம் காரணமா?

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியதை அடுத்து இன்று புனே மற்றும் ஹைதராபாத்தில் இருந்து மேலும் 4 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன
 
சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய இந்த தடுப்பூசிகளை மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டதாகவும் இதனை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
ஐதராபாத்தில் இருந்து 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் புனே மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து மூன்று லட்சத்து 76 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் சென்னை வந்துள்ளன என மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்