வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (21:37 IST)

தமிழறிஞர்கள் பங்கேற்ற திருக்குறள் பேரவையின் 38 - ஆம் ஆண்டு விழா

karuvur
கருவூர் திருக்குறள் பேரவையின் 38 - ஆம் ஆண்டு விழா இன்று காலை நடைபெற்றது. திருவள்ளுவர் சிலை வாகனத்துடன் மேளவாத்ய இசை முழங்க நகரத்தார் சங்க மண்டபம் முன் ஊர்வலம் புறப்பட்டது செயலாளர் மேலை பழநியப்பன் வரவேற்க திருப்பூர் செண்பகம் பெயிண்ட்ஸ் சீனிவாசன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தை துவக்கிவைத்தார்.

மனோகரா கார்னர், சுமதி பல காரக் கடை தலைமைத் தபால் நிலையம் ஆகிய சந்திப்புகளில் புரவலர் ஆரா ஈசுவர மூர்த்தி ,கவிஞர் அழகரசன் , தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் திருமதி ஜோதி , பரமத்தி சரவணன் செயம் கொண்டான் கிருங்கை சேதுபதி குறள் சிறப்பு உரை ஆற்றினர்.

 
பின் அரங்க நிகழ்விற்கு தலைவர் ப.தங்கராசு தலைமை உரை ஆற்றி விருதாளர்களுக்கு விருது வழங்கினார் சுவாமி சித்த குருஜி உலகிலேயே உயர்ந்த சிறந்த மொழி - தமிழ் என்றும் , அறிய நூல் திருக்குறள் என்றும் திருக்குறள் நெறி வாழ்ந்தால் உலகில் சான்றோன் ஆகலாம் என்றும் , நற்றாள் தொழாஅர் எனின் என்பதற்கு விளக்கமளித்து பேசி சிறந்த நூல் பரிசு பெற்ற ஹைதராபாத் லட்சுமி நாச்சியப்பன், புதுச்சேரி கிருங்கைசேதுபமுனைவர் கடவூர் மணிமாறன் , உதயகுமரன் , பரமத்தி சண்முகம் , சண்முக சிதம்பரம் குளித்தலை பாபத்மப்பிரியா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி புரவலர் சுமதி சிவசுப்பிரமணியன் ஜெயா பொன்னுவேல் , புலவர் பார்த்தசாரதி உள்ளிட்டோருக்கு பரிசுகள் பாராட்டு வழங்கினார்.
 
முனைவர் கிருங்கை சேதுபதி மாணவர்களுக்கும் , படைப்பாளர்கள் 50 பேருக்கும் பரிசு வழங்கி உரை ஆற்றினார் மேலை பழநியப்பன் தொகுத்த கவின் மிகு கருவூர் நூலை முனைவர் கடவூர் மணிமாறனும் , முனைவர் திருமூர்த்தியின் நூல்களை முனைவர் கன்னல் , பாவலர் ப. எழில்வாணனும் வெளியிட்டனார்.
 
விழா மலரை தமிழ்ச் செம்மல் நாவை சிவம் வெளியிட்டார் விழாவில் சீனிவாசபுரம் வெங்கட்டரமணன் தேவகோட்டை கதிரேசன் , காரைக்குடி பழநி வேலு , பி.பி.சிந்தன் அபிராமி சோமு .மெய்யப்பன் , இந்தியன் வங்கி பணிநிறைவு முத்தையா | ஓவியர் ரவிக்குமார், நீலவர்ணன், சாதுராசன் உள்ளிட்ட திரளான தமிழறிஞர்கள் பங்கேற்றனர். மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில், கிருங்கைசேதுபதி திருக்குறளைப் போல வாழ்வியல் அறநூல் வேறு எதுவும் இல்லை . ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் , எப்படி வாழக்கூடாது என்பதை தெளிவாக விளக்குகிற நூல் திருக்குறள்.
 
வளரும் சமுதாயத்தின் உள்ளத்தில் திருக்குறளை பதிப்பதில் திருக்குறள் வாழ்வியலாக்குவதில் சற்றும் தளராது பணியாற்றும் பேரவைகளுள் அடிகளாரால் துவைக்கப்பட்ட பெருமை மிக்கது கருவூர் திருக்குறள் பேரவை என்றார்.