திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: திங்கள், 16 ஜூன் 2025 (12:48 IST)

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

Stalin

இன்று தஞ்சாவூரில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மண்டலத்திற்கான பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “சோழநாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே கம்பீரம் கிடைக்கிறது. தஞ்சையையும், கலைஞர் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது. கலைஞர் கருணாநிதியின் வழியில் நானும் டெல்டாக்காரன் என்ற உணர்வில் தஞ்சாவூர் வந்துள்ளேன்” என கூறினார்.

 

அதன்பின்னர் தஞ்சைக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அவையாவன:

 
  • டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி சிறப்பு திட்டத்திற்காக ரூ.82 கோடி ஒதுக்கீடு. டெல்டா அல்லாத மாவட்டங்களின் நெல் சாகுபடி திட்டத்திற்காக ரூ.132 கோடி ஒதுக்கீடு.
  • தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும்.
  • வெண்ணாறு, வெட்டாறு பிரியும் இடத்தில் ரூ.42 கோடியில் பாலம் அமைக்கப்படும்.
  • கல்லணை கால்வாய் ஓர சாலை ரூ.40 கோடியில் அகலப்படுத்தப்படும்.
 

இதுதவிர கார், குறுவை, சொர்ணவாரி சிறப்பு திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் உள்ளிட்டவற்றால் விவசாயிகள் நல்ல பலனை அடைவதாகவும், திமுக ஆட்சியில் தஞ்சைக்கு பல்வேறு திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

Edit by Prasanth.K