செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 மார்ச் 2018 (17:20 IST)

கோவில் உண்டியலில் புத்தம் புதிய ஐபோன் 6: என்ன செய்வது என்ற குழப்பத்தில் நிர்வாகிகள்

ஆந்திராவில் உள்ள முருகன் கோவில் ஒன்றின் உண்டியலில் புத்தம் புதிய ஐபோன் 6 மாடல் இருந்ததை கண்டு கோவில் நிர்வாகத்தினர் ஆச்சரியம் அடைந்தனர்

பொதுவாக உண்டியலில் பணம், நகை போன்ற பொருட்களைத்தான் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவது உண்டு. ஆனால் ஆந்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் உண்டியலில் வாரண்டி அட்டையுடன் கூடிய புத்தம் புதிய ஐபோன் 6 மொபைலை பக்தர் ஒருவர் காணிக்கையாக்கி உள்ளார்.

போன் கடை புதியதாக திறப்பவர்கள் யாராவது முதல் போனை காணிக்கையாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காணிக்கையாக வந்த போனை கோவில் நிர்வாகத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாமா? அல்லது ஏலம் விட்டு அந்த தொகையை கோவிலின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடலாமா என்று கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.,