வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 மார்ச் 2024 (13:56 IST)

தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்.. என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் சில வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் 27 வேட்பாளர்கள் தகுதி இயக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒரு சிலர் இன்னும் தேர்தல் செலவு கணக்கு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துள்ளது. குறிப்பாக சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran