1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (15:27 IST)

ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்க தி.மு.க.வில் 250 அ.தி.மு.க.வினர்

ஜெயலலிதா அப்பல்லோவில் இருக்க தி.மு.க.வில் 250 அ.தி.மு.க.வினர்
திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூரில் அதிமுக கட்சியை சேர்ந்த 250 பேர் திமுக கட்சியில் இணைந்தனர்.

 

 


 

திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலாளர் ராசையா, அதிமுக ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலைவாணி ஆகியோர் தலைமையில் 250 அ.தி.மு.க.வினர், திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
 
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியினருக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தியில் அவர்கள் அனைவரும் திமுக கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது.