1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 school students rescued dead in pond

2 பள்ளி மாணவர்கள் குளத்தில் சடலமாக மீட்பு

thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தொல்லியல் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள குட்டையில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளுவர் மாவட்டம் கவரப்பேட்டை அருகில் தொல்லியல் துறைக்குச் சொந்தமாக இடத்தில் ஒரு குட்டை உள்ளது.

இங்கு, 2 மாணவர்கள் சடலமாக மிதந்த  நிலையில், சடலங்களைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், நகுல், கோபிசந்த் என்ற ஒரு மாணவர்கள் புதன் கிழமை மாலை முதல் வீட்டில் காணவில்லை என்றும், இன்று காலையில் அங்குள்ள குட்டையில் அவர்கள் சடலமாக கண்டெடுக்கபப்ட்ட நிலையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுளது.

இருவரின் சடலமும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!