கர்நாடகத்திலிருந்து வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.43 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் நாளை மீண்டும் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது.