சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திண்டுக்கல் , திங்கள், 29 ஏப்ரல் 2024 (14:41 IST)

18 ம் நுாற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த காசி பண்டாரத்தின் மகன் பழனிமலை பண்டாரத்திற்கு சிவகங்கை அரசர் கண்டெடுக்கப்பட்ட இந்த செப்பேடு வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
875 கிராம் எடை , 44 சென்டிமீட்டர் உயரம், 25 சென்டிமீட்டர் அகலத்தில் உள்ள இந்த செப்பேடுசிவகங்கை சீமை அரசர் விசய ரகுநாத பெரிய உடையார் தேவர்,பழனி மலை முருகனுக்கு வழங்கிய பூதானம் எனும் நிலக் கொடையை பற்றி குறிப்பிடுகிறது.
 
இதில்,மயில்,வேல், சூரியன்,சந்திரன், அரசர் உள்ளிட்ட படங்கள் வரையப்பட்டு முன் பின் என இரு பக்கங்களும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.