திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (13:24 IST)

18 வயது இளம்பெண் படுகொலை.. 17 வயது காதலனின் வெறிச்செயல்.. நெல்லையில் பரபரப்பு..!

18 வயது இளம் பெண்ணை அவரது 17 வயது காதலன் வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
18 வயது இளம் பெண்ணை கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி நெல்லை கரிசல்குளம் பகுதி மக்கள் ஊர்வலம் சென்றனர்.
 
சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலையாளி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
முன்னதாக 18 வயது இளம் பெண்ணை 17 வயது வாலிபர் காதலித்த நிலையில் பெண்ணின் பெற்றோர் கண்டித்ததால், இளம் பெண் காதலனிடம் பேசாமல் இருந்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த காதலன் இளம் பெண்ணை வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva