திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:38 IST)

தற்கொலை செய்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞரை காப்பாற்றிய போலீஸ்

வேலையில்லாத விரக்தியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்ய  முயன்ற நிலையில் அவரை போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.
 
இன்றைய காலத்தில்  தேர்வில் தோல்வி, தேர்வு அச்சம் போன்றவற்றிற்காக உயிரை மாய்த்துக் கொள்ளுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையில்லாத விரக்தியால் தற்கொலை செய்வது எப்படி ?என பலமுறை   கூகுளில் தேடி தற்கொலை முயன்றுள்ளார்.  
கூகுள் சேர்ச்  மூலம் மும்பை போலீஸார் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

அந்த இளைஞர் பலமுறை கூகுளில் இப்படி தேடியதைக் கண்டறிந்த இண்டர்போல் அதிகாரிகள் மும்பை போலீஸாருக்கு மெயில் மூலம் தகவல் தெரிவித்ததன் மூலம் இளைஞர் காப்பாற்றப்பட்டுள்ளார்.