1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 1779 COVID19 positive cases reported in Tamil Nadu today

தமிழகத்தில் 1700ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகம்
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1779 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 873,219 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1779 பேர்களில் 664 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 11பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 1027 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 850,091 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 80,761 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 187,71,192 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் விண்ணம் அதிக விலைக்கு ஏலம் !